'குக் வித் கோமாளி' சீசன் 4: முதல் நபராக ஃபைனலுக்கு தகுதி பெற்றவர் இவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் மற்ற சீசன்கள் போலவே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்து போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த சீசன் அதன் பிறகு இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் தொடர்ந்தது. இந்த நிலையில் தற்போது விசித்ரா, ஷிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி மற்றும் கிரண் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவர் இந்த வாரம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாரம் சிறப்பாக சமையல் செய்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போட்டியாளர் விசித்ரா என்று நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர்களால் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விசித்ரா நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மீதமுள்ள நான்கு போட்டியாளர்களில் இறுதி போட்டிக்கு இன்னும் மூன்று பேர் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் முதல் நபராக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கனி தான் அந்த சீசனில் டைட்டில் பட்டத்தை வென்றார். அதேபோல் மூன்றாவது சீசனில் முதல் நபராக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஸ்ருதிகா, அந்த சீசனில் டைட்டில் பட்டத்தை வென்றார். அதே போல் விசித்ராவும் டைட்டில் பட்டதை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com