'குக் வித் கோமாளி சீசன் 4': 8 குக்குகள் இவர்கள் தான்!

  • IndiaGlitz, [Thursday,January 26 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக நபர்களை கவர்ந்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது தடவை பார்க்க முடியாது, ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பதால் இந்த நிகழ்ச்சியை தினந்தோறும் ஏராளமானவர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் நாளை மறுநாள் முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குக்குகள் யார் யார்? கோமாளிகள் யார் யார்? என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளன.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 8 குக்குகளின் பெயர்கள் இதோ:

1. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

2. நடிகை ஷெரின்

3. நடிகர் ராஜ் ஐயப்பா

4. நடிகை ஷிவாங்கி

5. விஜே விஷால்

6. ஜிகர்தண்டா நடிகர் காளையன்

7. நடிகை விசித்ரா

8. ஆன்ட்ரின் நௌரிகட்

மேலும் இந்த சீசனின் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.