பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியாளர்.. களைகட்டும் நிகழ்ச்சி..!

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளது.. தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவலின் படி, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

பிக் பாஸ் 7 சீசன் முடிவடைந்து, எட்டாவது சீசன் தொடங்க இருக்கின்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியின் புரமோஷன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் தகவல்களும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பெற்ற நிலையில், அவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் அவர் என்ன சொல்ல போகிறாய் மற்றும் ’செம்பி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, நொடிக்கு நொடி என்ற படத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம், அவருக்கு மேலும் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத் 'பாரதி கண்ணம்மா' நடிகர் அருண், நகைச்சுவை நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர்-நடிகர் ரஞ்சித் மற்றும் தொகுப்பாளர் ஜெகன், 'செல்லமா' சீரியல் நடிகை அன்சிதா, 'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகை பவித்ரா, 'பாரதி கண்ணம்மா' நடிகை பரீனா, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, 'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

More News

'க்ரஷ்' வெப்தொடரில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீராங்கனை.. உடன் நடிப்பவர் யார் தெரியுமா?

ஹாலிவுட்டில்  தயாராக இருக்கும் 'க்ரஷ்' என்ற சர்வதேச வெப் தொடரில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருடன் பிரபல

கிரேசி மோகன் வசனத்தை பார்த்து எனக்கு தாழ்வு மனப்பாண்மை வந்தது...... விவரிக்கும் விசு

அடுத்தவர் மனதை புண்படுத்த தெரியாது, ஒரு வசனம் சொன்னால் அதை சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஜோக் அடிப்பார் அதுதான் கிரேசி மோகன். அவர் எழுத்தை பார்த்து எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்தது

மூட்டை மூட்டையாக காதல் கடிதம்... பெண்கள்தான் அவர் பின்னாடி போனாங்க... கமலா செல்வராஜ்

கமலா செல்வராஜ் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான மகப்பேறு மருத்துவர் ஆவார் . தமிழ் திரைப்பட நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளாவார்.

குடியை ஏன் அம்மா துணையா தேர்ந்தெடுத்தீங்க..... நடிகையர் திலகம் குறித்து ஜெயசித்ரா

நடிகை ஜெயசித்ரா மாட்டுக்கார வேலன் படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார். நாயகி, குணச்சித்திர நடிகை என தமிழிலும், தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

குடியை ஏன் அம்மா துணையா தேர்ந்தெடுத்தீங்க..... நடிகையர் திலகம் குறித்து ஜெயசித்ரா

நடிகை ஜெயசித்ரா மாட்டுக்கார வேலன் படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார். நாயகி, குணச்சித்திர நடிகை என தமிழிலும், தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.