close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியாளர்.. களைகட்டும் நிகழ்ச்சி..!

Sunday, September 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளது.. தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவலின் படி, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

பிக் பாஸ் 7 சீசன் முடிவடைந்து, எட்டாவது சீசன் தொடங்க இருக்கின்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியின் புரமோஷன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் தகவல்களும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பெற்ற நிலையில், அவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் அவர் "என்ன சொல்ல போகிறாய்" மற்றும் ’செம்பி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, "நொடிக்கு நொடி" என்ற படத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம், அவருக்கு மேலும் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத் 'பாரதி கண்ணம்மா' நடிகர் அருண், நகைச்சுவை நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர்-நடிகர் ரஞ்சித் மற்றும் தொகுப்பாளர் ஜெகன், 'செல்லமா' சீரியல் நடிகை அன்சிதா, 'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகை பவித்ரா, 'பாரதி கண்ணம்மா' நடிகை பரீனா, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, 'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment