close
Choose your channels

குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளருக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!

Sunday, September 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் அந்த நிகழ்ச்சியில் ஆறாவது இடத்தை பெற்றார் என்பதும் அவருடைய புன்சிரிப்பு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. மேலும் ராஜா ராணி, சிவா மனசுல சக்தி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களிலும் ஸ்டார் மியூசிக் உட்பட சில ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரித்திகா கடந்த 2022 ஆம் ஆண்டு தொழில் அதிபர் வினு என்பவரை திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார். இந்த நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் கால்கள் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் ரித்திகா தமிழ்செல்வி பதிவு செய்து ’எங்கள் வீட்டு ராணியை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் சின்ன திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment