உங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா!

  • IndiaGlitz, [Sunday,April 18 2021]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா சமீபத்தில் சமந்தா போலவே காஸ்டியூம் அணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே. இந்த புகைப்படம் பவித்ராவின் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா நீங்கள் என்னை போலவே மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சமந்தாவுக்கு பவித்ரா பதிலளித்துள்ளார். உங்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது எனக்கு மிகவும் பெருமை என்றும், ஆனால் நீங்கள் பாராட்டிய புகைப்படம் உள்ள கணக்கு என்னுடையது அல்ல என்றும் அது என்னுடைய பெயரில் இருக்கும் போலி கணக்கு என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இரண்டிலும் உங்கள் பாராட்டு எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும் உங்கள் கனிவான பாராட்டுக்கு கோடான கோடி நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டோ ஷூட்டை உங்களைப்போலவே உருவாக்கியவர் மித்திரன் என்றும் அவரும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்றும் பவித்ரா கூறியுள்ளார், பவித்ராவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

எப்படிப்பா மனசு வருது உங்களுக்கு? ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்!

தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த ரசிகர்களை 'எப்படிப்பா உங்களுக்கு மனசு வருது' என கடிந்து கொண்ட குக் வித் கோமாளி புகழால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால்

யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்களும்,

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்!

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு முகமெல்லாம் வீங்கி விபரீதம் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது

இந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...!சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்....!

இந்தியாவில் குறிப்பிட்ட எந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என, சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.