பள்ளி மாணவராக 'குக் வித் கோமாளி' ரக்ஷன் : ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களின் தொகுப்பாளர் ஆன ரக்ஷன் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உட்பட பல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் ரக்ஷன். இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ’மறக்குமா நெஞ்சம்’ என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. யோகேந்திரன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
ரக்ஷன், விஜய் டிவி தீனா உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சச்சின் வாரியர் என்பவர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
A refreshing first look of #MarakkumaNenjam 👌🏼
— Arunmozhi Varman (@actor_jayamravi) May 15, 2023
Best wishes to @RakshanVJ & team 🎉@ActDheena
Directed by @yoagandran
Produced by @filiaentertain & @KuviyamMedia @teamaimpr @prosathish pic.twitter.com/3nMJ1BZXgp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments