பள்ளி மாணவராக 'குக் வித் கோமாளி' ரக்‌ஷன் : ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Monday,May 15 2023]

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களின் தொகுப்பாளர் ஆன ரக்‌ஷன் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உட்பட பல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் ரக்‌ஷன். இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ’மறக்குமா நெஞ்சம்’ என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. யோகேந்திரன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ரக்‌ஷன், விஜய் டிவி தீனா உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சச்சின் வாரியர் என்பவர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

'வாலு பார்ட்டி': லைகாவின் அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகிய இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

'தி கேரளா ஸ்டோரி' நடிகைக்கு திடீர் விபத்து.. என்ன ஆச்சு..?

'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை திடீரென விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் இந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

முதல்முறையாக வெப் தொடரில் நடிக்கும் தமிழ் நடிகர்.. பூஜையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்..!

தமிழ் நடிகர் முதன்முதலாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் அதன் பூஜையில் சூப்பர் ஸ்டார் நடிகர் கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கரு முட்டையை பாதுகாத்தோம்… 10 வருடம் கழித்து கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி தகவல்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசானா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதுகுறித்த புதுத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றிங்கன்னு கூட கேப்பியா? நெட்டிசனை வறுத்தெடுத்த ஃபாத்திமா பாபு..!

 நடிகை பாத்திமா பாபு சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களிடம் உரையாடிய போது கேள்வி கேட்ட ஒரு நெட்டிசனை 'என்ன காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேப்பியா? என சரியான பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.