விஜய்சேதுபதியுடன் பைக்கில் வலம் வரும் 'குக் வித் கோமாளி': வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் ‘குக் வித் கோமாளி புகழ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தற்போது இருவரும் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் புகழ் நடித்து வருவதாகவும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் கேரக்டர் புகழுக்கு என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் புகழ் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இதில் இருவரும் பைக்கில் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி’ புகழ் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் ஆர்.கே.சுரேஷ் வீட்டில் நடந்த விசேஷம்: நேரில் குவிந்து வாழ்த்து கூறிய பிரபலங்கள்!

தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த ஆர்கே சுரேஷ் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' என்ற படத்தில் வில்லனாக நடித்தார்.

மனித நேயத்துடன் சமூக சேவை செய்யும் சூப்பர் சிங்கர் பிரியங்கா: ரசிகர்கள் நெகிழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் பட்டம் வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் அவர் ஒரு சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார்

'பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மேலும் ஒரு 'குக் வித் கோமாளி'?

கடந்த நான்கு மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இதனை அடுத்து ஐந்தாவது சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே 

முதல்வர் வேட்பாளர்கள்- பலம் யாருக்கு? விளக்கும் அரசியல் வீடியோ!

பெரும் தலைவர்கள் யாரும் இல்லாது தமிழகத்தில் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

விஜய் படத்தில் அறிமுகம், அஜித் படத்தில் விருது: டி.இமான் பெருமிதம்

தளபதி விஜய் படத்தில் அறிமுகமாகி தல அஜித் படத்தில் விருது கிடைத்துள்ளது தனது பெருமையான ஒன்று என்று டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்