'குக் வித் கோமாளி' பிரபலம் திறந்த கடைக்கு சீல்; ரூ.5 ஆயிரம் அபராதம்

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த புகழ் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று அவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு செல்போன் கடையை திறந்து வைக்க வந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்து விட்டதால் அவரை பார்க்கவும் அவருடன் செல்பி எடுக்கவும் பலர் குவிந்ததால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து கோவிட் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத செல்போன் கடையை மூடி சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்தனர்.

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் திறந்துவைத்த கடை, திறந்த அன்றே மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.