கெட்டப் போட இத்தனை மணி நேரமா? 'காந்தாரா' குறித்து கோமாளி புகழ்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார்கள் என்பது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வகையில் நேற்று கோமாளிகளில் ஒருவரான புகழ், ‘காந்தாரா’ படத்தின் கெட்டப்பை போட்டு வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகள் மற்றும் கோமாளிகள் ‘காந்தாரா’ கெட்டப்பில் புகழ் வந்தபோது ஆனந்த கண்ணீர் வடித்தனர் என்பதும் பலர் கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘காந்தாரா’ மேக்கப் போடவே தனக்கு நான்கு மணி நேரம் ஆகிவிட்டது என்றும் இந்த படத்திற்காக ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது குழுவினர் எந்த அளவுக்கு உழைத்திருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் புகழ் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கூறியதாவது;
இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...
மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...❤️ credits @shetty_rishab pic.twitter.com/KRD8nplF6t
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) February 25, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout