close
Choose your channels

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் கமிட்டான 'குக் வித் கோமாளி' புகழ்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் காமெடி ஹீரோ என்று புகழப்படும் புகழ் ஏற்கனவே அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலக மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி படத்தில் புகழ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் இருந்து இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது என்று தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் புகழ் இணைந்துள்ளதாகவும், அவருக்கு இந்த படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. மாஸ் நடிகர் விஜய்சேதுபதியின் படத்தில் புகழ் இணைந்தை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு நிமிடமும் தனது அசத்தலான காமெடியால் புகழ் பெற்று வரும் புகழ், அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதை அறிந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment