என் முதல் ஹீரோ அப்பா தான்: 'குக் வித் கோமாளி' புகழின் தந்தையர் தின ஸ்பெஷல்!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2 மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதும், இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பழைய எபிசோடுகளை ஹாட்ஸ்டாரில் திரும்ப திரும்ப ரசிகர்கள் பார்த்து வருவதிலிருந்து இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிய வரும்.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’களும், கோமாளிகளும் தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமானதோடு அதில் சிலர் திரையுலகில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தற்போது 7 படங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இன்று தந்தையர் தினத்தை அடுத்து புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அப்பாவுக்கு அன்புடன் சாப்பாடு ஊட்டும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அருகில் அவரது தாயார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக, ‘தந்தையர் தின வாழ்த்துக்கள்’ என்றும், என்னுடைய முதல் ஹீரோ தந்தை தான் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 

More News

மகன்களுடன் தனுஷ்: தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படம் வைரல்!

ஜூன் 20ம் தேதியான இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய தந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர்

திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் குறித்த அரசின் அறிவிப்பு!

திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது என்ன என்பதை தற்போது பார்ப்போம்

பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: ஜூன் 28 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்?

தமிழகத்தில் மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.

தமிழகத்தில் குறையும் கொரோன பாதிப்பு....! மக்கள் நிம்மதி பெருமூச்சு....!

தமிழகத்தில் இன்று 8,183  நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  உயிரிழப்பு என்பது 200-க்கும் கீழ் குறைந்துள்ளது.