டப்பிங்கின் போது கதறி அழுத 'குக் வித் கோமாளி' புகழ்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த அனைவருமே வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் குறிப்பாக புகழ், ஷிவாங்கி, பவித்ரா, தர்ஷா உள்பட ஒருசிலர் பிரபலமானது மட்டுமின்றி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி மூலம் பிரபலம் அடைந்த புகழ் தற்போது விஜய்சேதுபதி மற்றும் சிம்பு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது புகழ் ஒரு திரைப்படத்திற்காக டப்பிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் கதறி அழுதவாறே டப்பிங் செய்து கொண்டு அவ்வப்போது அவரது வழக்கமான சேட்டையையும் செய்கிறார். இந்த காட்சி எந்த படத்திற்கான டப்பிங் என்று தெரியவில்லை என்றாலும் இந்த வீடியோவை பார்த்து புகழுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.