குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழின் சர்ச்சை காட்சி: நீக்கிய டிவி நிர்வாகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறு சர்ச்சை ஏற்பட்டுள்ளதை அடுத்து சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கன்ஃபூஷன் அறைக்கு சென்று குறிப்புகளை எடுத்து வந்து ’குக்’களுக்கு சொல்ல வேண்டுமென்று டாஸ்க் அளிக்கப்பட்டது. இதில் புகழ் கன்ஃபூஷன் அறைக்கு சென்ற போது ’நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், ஆம்பளைகளுக்கே உங்களை லவ் பண்ண தோன்றும்’ என்று பிக்பாஸ் பாண்யில் ஒரு குரல் கேட்டது.
இந்த வசனம் பார்வையாளர்களை அதிருப்தி அடையச் செய்தது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட வசனம் தேவையா? என நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து டிவியில் ஒளிபரப்பாகும் போது இந்த வசனம் மட்டும் கட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஹாட்ஸ்டாரில் இந்த வசனம் அப்படியே உள்ளது என்றும் இன்னும் கட் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Today's episode... pic.twitter.com/wRnSCgpIEg
— ???? Alyosha (@homoduos) March 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments