'தளபதி 65' படத்தில் நடிக்கின்றாரா 'குக் வித் கோமாளி' புகழ்?

  • IndiaGlitz, [Monday,February 08 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் குக்’களும், சரி, கோமாளிகளும் சரி திரையுலகில் தற்போது வாய்ப்புகள் பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா லட்சுமி, கவின் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் என்பவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஏற்கனவே புகழ், சந்தானம் நடித்து வரும் ஒரு திரைப்படத்திலும் அருண் விஜய்யின் 33வது திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ திரைப்படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கும் புகழ், விரைவில் பெரிய திரையிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.