'குக் வித் கோமாளி' பவித்ராவின் வேற லெவல் குத்து டான்ஸ்: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதும் நாளை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கலைநிகழ்ச்சிகள் உள்பட மொத்தம் 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே போட்டியில் கனி, அஸ்வின். பாபா பாஸ்கர். பவித்ரா மற்றும் ஷகிலா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவராகிய பவித்ரா, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குத்தாட்டம் ஆடியதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பவித்ரா ஏற்கனவே நல்ல டான்சர் என்பதால் இந்த இந்த குத்து டான்ஸை தற்போது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.