'தளபதி 65' படத்தில் 'குக் வித் கோமாளி' பவித்ரா? ட்ரீட் வைப்பதாக அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ’குக்’களும் கோமாளிகளும் வேற லெவலில் பிரபலமாகியுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருசிலருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி. இவர் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சதீஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தளபதி 65’ படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்ததே, அது உண்மையா? என்று கேட்க ’இப்போது தான் இந்த செய்தியை நானே கேள்விப்படுகிறேன், ஒருவேளை நீங்கள் சொல்லி அது உண்மையில் நடந்தால் உங்களுக்கு நான் தனியாக ட்ரீட் வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.
#Thalapathy65 அப்டி நடந்துச்சுனா ட்ரீட் வைக்குறேன் ????
— Priyamudan Karthik (@KarthikMdr3) April 12, 2021
~ @itspavitralaksh#Master @actorvijay pic.twitter.com/f5cDDZV68M
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments