'தளபதி 65' படத்தில் 'குக் வித் கோமாளி' பவித்ரா? ட்ரீட் வைப்பதாக அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ’குக்’களும் கோமாளிகளும் வேற லெவலில் பிரபலமாகியுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருசிலருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி. இவர் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சதீஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தளபதி 65’ படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்ததே, அது உண்மையா? என்று கேட்க ’இப்போது தான் இந்த செய்தியை நானே கேள்விப்படுகிறேன், ஒருவேளை நீங்கள் சொல்லி அது உண்மையில் நடந்தால் உங்களுக்கு நான் தனியாக ட்ரீட் வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.

More News

காலா பட நாயகியின் அட்டகாசமான போட்டோ ஷுட்… வேற லெவல் புகைப்படம்!

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அரசியல் திரைப்படம் “காலா”.

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இரண்டு அப்டேட்கள்: வீடியோ வைரல்

நடிகர் அருண் விஜய் தற்போது 'அக்னி சிறகுகள்', 'பாக்ஸர்', 'சினம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அது தவிர இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திலும்,

ஆரியை பார்த்து 'சார் யாரு? என கேட்ட நபர்: வைரல் வீடியோ

கொரனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆரியை பார்த்து ஒரு நபர் 'சார் யாரு? என்று கேட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

இளம் நடிகருக்காக இணைந்த விஜய்சேதுபதி-கீர்த்தி சுரேஷ்!

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன?

சமீபத்தில் வெளியான தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்