புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்றாங்க: பவித்ராவின் பாய்பிரண்ட் ஆதங்கம்!

  • IndiaGlitz, [Sunday,April 04 2021]

புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்டுகிறார்கள் என்றும் நான் உண்மையில் பவித்ராவின் நெருங்கிய நண்பர் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் சுதர்சன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் செலிபிரிட்டி வாரம் என்பதால் ஒவ்வொரு குக்-களும் தங்களுடைய உறவினர் அல்லது நண்பர்களை அழைத்து வந்துள்ளனர். அந்த வகையில் பவித்ராவின் பெற்றோர்கள் சென்னைக்கு வர முடியாத காரணத்தினால் தனது நெருங்கிய நண்பரான சுதர்சனை அழைத்து வந்திருந்தார். அவரை பார்த்ததும் புகழ் அதிர்ச்சி அடைந்து இருந்தார் என்பதும் நேற்றைய எபிசோடில் இருவரும் அவ்வப்போது மோதிக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுதர்சன் பேட்டி ஒன்றில் கூறிய போது ’நானும் பவித்ராவும் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து இருக்கிறோம் என்றும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் ஆனால் புகழ் ரசிகர்கள் எங்களை உறவைப் புரிந்து கொள்ளாமல், புகழுக்கும் பவித்ராவுக்கு இடையில் நான் வந்து விட்டது போல் நினைத்து புகழ் ரசிகர்கள் என்னை திட்டுகிறார்கள் என்றும் ஆனால் எபிசோடு முழுவதையும் பார்த்தால் எங்களை புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்

முன்னதாக தனது குடும்பத்தினர் யாரும் சென்னைக்கு வர முடியவில்லை என்பதால் எனக்கு சமைக்கத் தெரிந்த ஒரே பிரண்ட் அவர்தான் என்பதால் சுதர்சனை தன்னுடன் அழைத்து வந்ததாக பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.