கோமாளியாக ஒரே ஒரு சீசன் தான்.. புதிய கார் வாங்கி அப்பா-அம்மாவுக்கு கிஃப்ட்..!

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட மோனிஷா புதிய கார் வாங்கி தனது அப்பா அம்மாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டவர் மோனிஷா. இவர் இந்த சீசனின் சிறந்த கோமாளி என்ற பரிசையும் பெற்றார். மேலும் அவரது காமெடி ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் சீனியர் கோமாளிகளை விட அவர் மக்கள் மனதில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படத்தில் அவருடைய தங்கை கேரக்டரில் நடித்து மோனிஷா ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது மோனிஷா புதிய கார் வாங்கியுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய கனவு என்றும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது நாங்கள் குழந்தையாக இருக்கும்போது எங்கள் தந்தை ஒரு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கினார். அது அவ்வப்போது நின்றுவிடும். எல்லோரும் சேர்ந்து தள்ளி தள்ளிதான் ஸ்டார்ட் பண்ணுவோம். அப்புறம் சுத்தமா ஓடல.

சில வருடங்கள் கழித்து ஒரு நானோ கார் வாங்கினோம். ஆனால் அதை சில பேர் ஒரு காராக கூட மதிக்க மாட்டாங்க. இந்த நிலையில் தற்போது புதிய கார் வாங்க வேண்டும் என்ற என் கனவு நனவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

புதிய காரில் தாய் தந்தை மற்றும் சகோதரியுடன் அவர் செல்லும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.