'குக் வித் கோமாளி' சீசன் 2: மணிமேகலைக்கு கிடைத்த விருது என்ன தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் நேற்றைய நிகழ்ச்சியில் கனி டைட்டில் வின்னராகவும், இரண்டாவது இடத்தைப் ஷகிலாவும் மூன்றாவது இடத்தை அஸ்வினும் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் வருகை ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் மிகச்சிறந்த கோமாளில் ஒருவரான மணிமேகலைக்கு ’கண்டெண்ட் குயின்’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் கூடிய தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள மணிமேகலை இந்த விருதால் தனக்கு வேற லெவல் ஹாப்பி என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் உங்கள் எல்லோருடைய பாராட்டுகளும் ஒவ்வொரு எபிசோட்லும் என்னை மேலும் நன்றாக செய்ய வேண்டுமென ஊக்குவித்தது என்றும் அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பாக குக் வித் கோமாளி டீமுக்கும் நன்றி என்றும் இந்த விருது எனக்கு மிகப்பெரிய பெருமைக்குரிய விருது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மணிமேகலையின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

More News

'குக் வித் கோமாளி' பவித்ரா, இன்னொரு சமந்தாவா? வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்'களும், கோமாளிகளும், நடுவர்களும்

என்னை இரண்டாவது கணவர் துன்புறுத்துகிறார்: போலீசில் புகார் அளித்த தமிழ் நடிகை

தமிழ் திரைப்பட கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர் தன்னை இரண்டாவது கணவர் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மாரி-2 படத்தின் வில்லன் டொவினோ தாமஸ்ஸுக்கு கொரோனா பாதிப்பு!

இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் மாரி-2. இந்தப் படத்தின் வில்லனாக நடிகர் டொவினோ தாமஸ் நடித்து இருந்தார்.

டெல்லியில் முழு ஊரடங்கு....! முதல்வர் அறிவிப்பு...!

வாரத்தின் இறுதி நாட்களில் டெல்லியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்...! வானிலை மையம்...!

தமிழகத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.