இதுதான் கடைசி.. இனிமேல் வரமாட்டேன்.. 'குக் வித் கோமாளி' மணிமேகலை முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிப்ரவரி 26 ஆம் தேதி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் தனது கடைசி எபிசோடு என்றும் இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன் என்றும் மணிமேகலை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 1 கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து மணிமேகலை கோமாளியாக பங்கேற்று வருகிறார் என்பதும் அவர் குக்குகளை மட்டுமின்றி நடுவர்களையும் கூட காமெடியாக கலாய்த்து வருவதை பார்வையாளர்கள் ரசித்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த கெட்டப் போட்டாலும் அந்த கெட்டப்பாகவே மாறி அதில் தனது முழு திறணையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளவர் மணிமேகலை என்பதும் அவருடைய காமெடி மிகப் பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இதில் முதல் எபிசோடில் மணிமேகலை கலந்து கொள்ளவில்லை என்றாலும் இரண்டாவது எபிசோடில் இருந்து கலந்து கொண்டு வருகிறார் என்பதும் வழக்கம் போல் அவரது காமெடிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் ’நானே வருவேன்’ என்ற படத்தின் கெட்டப் தான் எனது கடைசி கெட்டப் என்றும் இனிமேல் நான் வரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து ரசிகர்கள் என் மீது அன்பை பொழிந்தீர்கள், உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன், எனக்கு கொடுத்த வாய்ப்புகளை கொண்டு சிறப்பாக நான் செயல்பட எப்போதும் முயற்சி எடுப்பேன், இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்ததாக நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பு எதிர்பாராததும் நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இதுபோன்ற ஒரு அன்பை நீங்கள் அழைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மணிமேகலையில் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோமாளியாக இருந்த ஷிவாங்கி குக்காக மாறிவிட்டார் என்பதும் பாலா இந்த சீசனில் இல்லை என்ற குறை இருக்கும் நிலையில் தற்போது மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments