தடுப்பூசி போட்டுகிட்டா காரக்குழம்பு சாப்பிடக்கூடாதாம்: கனியை கலாய்த்த நெட்டிசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனின் டைட்டில் வின்னராக கனி வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக குறிப்பிட்டு, தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் ஒரு நெட்டிசன், ‘தடுப்பூசி போட்டால் கொஞ்சநாள் காரக்குழம்பு சாப்பிடக் கூடாதாம், பாத்துக்கோங்க கனி அக்கா’ என்று கலாய்த்து பதிவு செய்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனியை அனைவரும் காரக்குழம்பு என்று கிண்டல் கேலி செய்து வருவார்கள் என்பதும் குறிப்பாக பாபா மாஸ்டர் மற்றும் பாலா ஆகியோர் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் கனியை காரக்குழம்பு என கிண்டல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஃபினாலே நிகழ்ச்சியின்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் கூட ’பைனலில் காரக்குழம்பு செய்யப்போகிறார்களா? என்று கனியிடம் கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டா கொஞ்சனாள் காரக்குளம்பு சாப்பிடக்கூடாதாம்..!! பாத்து கனி கா...
— MSK (@sendilkmr90) May 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout