ஐந்து இந்திய மொழிகளில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருவது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியை அடுத்து தற்போது ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியும் ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளது
தமிழில் சூப்பர் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது கன்னடத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ’குக் வித் கிறுக்கு’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்’குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
அதேபோல் மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் குக் வித் கோமாளி சீசன் 1 சுமாரான வெற்றியைப் பெற்ற போதிலும் சீசன் 2 மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிகமான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது
இதனை அடுத்து ஸ்டார் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை மற்ற மொழிகளுக்கு ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என மொத்தம் 5 மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout