குக் வித் கோமாளி' ஃபைனலில் திடீர் மாற்றம்: ரசிகர்கள் மகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது என்பதும், இந்த சீசனில் கலந்து கொண்ட குக்’களும், கோமாளிகளும் நான்ஸ்டாப் காமெடியில் கலக்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப்போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர் என்றும் இவர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வாரம் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இறுதிப் போட்டி நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புரமோ வீடியோக்களின் படி இந்த வாரம் ஃபைனல் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இந்த வாரம் செலிபிரிட்டி வாரம் என்பதும் இந்த போட்டியில் கலந்துகொண்ட குக்’கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான செலிபிரிட்டி ஒருவரை அழைத்து வந்துள்ளனர் என்பதும் புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
கனி தனது தங்கையும் சமீபத்தில் திருமணமான நடிகையுமான நிரஞ்சனாவை அழைத்து வந்துள்ளார். ஷகிலா தனது திருமங்கை மகளை அழைத்து வந்துள்ளார். அஸ்வின், சாண்டி மாஸ்டரை அழைத்து வந்துள்ளார். பவித்ரா தனது பாய்பிரெண்டை அழைத்து வந்துள்ளதால் புகழ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதேபோல் ஒவ்வொருவரும் ஒரு செலிபிரிட்டியை அழைத்து வந்துள்ளனர் என்பதும் இந்த வாரம் சனி ஞாயிறு ஜாலியான நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இறுதிப்போட்டி மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போய் உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com