'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலை தனது பாணியில் பாடும் 'குக் வித் கோமாளி' சுனிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சுனிதா தனது பாணியில் பாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடிய நிலையில் இதே பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள் என்பதும் இந்த வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சுனிதா அந்த நிகழ்ச்சியின் போதே பல பாடல்களை தனது கொஞ்சு தமிழில் தப்பு தப்பாக பாடிய காட்சிகளை ரசித்தோம். அந்த வகையில் ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ பாடலை சுனிதா தனது பாணியில் பாட, அருகில் ஷகிலாவின் மகள் மிளா இருக்கும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout