அஸ்வின் மீது காதலா? 'குக் வித் கோமாளி' சுனிதாவின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்று விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவர் சுனிதா. இவரும் ஷிவாங்கியும் மாறி மாறி அஸ்வினை காதலிப்பது போன்ற காட்சிகள் நகைச்சுவையுடனும் ரொமான்ஸ் ஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுனிதா சமீபத்தில் சமூகவலைதள நேரடி ஒளிபரப்பில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியபோது ’அஸ்வினுடன் காதல் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், மச்சான், நண்பன் என்று கூறும்போது அந்த வேவ்லெந்த் வேற மாதிரி இருக்கும். அதனால் எங்கள் ஜோடி நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றார்கள்.

மற்றபடி அவருடன் காதல் எதுவும் இல்லை அவர் எனக்கு நல்ல நண்பன் என்று கூறியுள்ளார். சுனிதாவின் முழு வீடியோவை இதோ பார்க்கலாம்.