யுவன் ஸ்டுடியோவில் விஜய் டிவி புகழ்: என்னவாக இருக்கும்?

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பிரபலமடைந்த புகழ், யுவன் சங்கர் ராஜாவின் ஸ்டுடியோவில் இருக்கும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் ஸ்டூடியோவில் சோபா ஒன்றில் தாவிக்குதித்து ஸ்டைலாக புகழ் உட்காருவது போன்ற வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ‘வந்தாரு, சாங்க போட்டாரு, ஹிட்டு, ரிப்பீட்டு’ என புகழ் பதிவு செய்துள்ளார்

யுவன் சங்கர் ராஜாவின் ஸ்டூடியோவுக்கு புகழ் வந்து இருப்பதை பார்க்கும் போது அவர் யுவனின் இசையில் பாடல் பாடுகிறாரா? அல்லது ஏதாவது ஒரு திரைப்படத்தின் டப்பிங் பேச வந்துள்ளாரா? என்பது போன்ற என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.