'குக் வித் கோமாளி' மணிமேகலை குடும்பத்தின் 2 வலிமையான பெண்கள்.. க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மணிமேகலை தனது குடும்பத்தின் வலிமையான இரண்டு பெண்களின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் டிவி உள்பட பல தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் மணிமேகலை. இருப்பினும் அவருக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான் பெரும் புகழை பெற்று தந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த மணிமேகலை அதன்பின் தற்போது மீண்டும் அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலைக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது க்யூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் தனது அம்மா மற்றும் பாட்டி ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படத்தை மணிமேகலை வெளியிட்டுள்ளார். எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறை பெண்கள் என்று குறிப்பிட்ட அவர் இந்த இரண்டு பெண்கள் தான் என் வாழ்க்கையில் நான் பார்த்த வலிமையானவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.