இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே... பிக்பாஸ் போட்டியாளராக ‘குக் வித் கோமாளி’ பிரபலமா?

  • IndiaGlitz, [Wednesday,September 25 2024]

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்திருக்கிறோம்.

இருப்பினும், அவ்வப்போது புதிதாக சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வி.டி.வி. கணேஷ் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதாக நேற்று செய்தி வெளியாகிய நிலையில், இன்று குக் வித் கோமாளி பிரபலமான சுனிதா ஒரு போட்டியாளர் என்று கூறப்படுவது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் அசத்திய சுனிதா பேசும் கொஞ்சும் தமிழை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்க ஆர்வமாக இருக்கிறோம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத் 'பாரதி கண்ணம்மா' நடிகர் அருண், நகைச்சுவை நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர்-நடிகர் ரஞ்சித் மற்றும் தொகுப்பாளர் ஜெகன், 'செல்லமா' சீரியல் நடிகை அன்சிதா, 'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகை பவித்ரா, 'பாரதி கண்ணம்மா' நடிகை பரீனா, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, 'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நிகழ்ச்சி தொடங்கும் நாளில் தான் உண்மையில் யார் யார் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதில் தெளிவாக தெரியவரும்.