close
Choose your channels

கமல்ஹாசனை சந்தித்த 'குக் வித் கோமாளி' அஸ்வின்: என்ன காரணம் தெரியுமா?

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’விக்ரம்’ வெற்றியை அடுத்து பல திரையுலக பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் சிரஞ்சீவி, சல்மான்கான் உள்பட பல பிற மாநில திரைப்பட கலைஞர்களும் கமல்ஹாசனுக்கும் ’விக்ரம்’ குழுவினருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் தற்போது பிரபுசாலமன் இயக்கி வரும் ’செம்பி’ படத்தின் குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்காக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் செம்பி படத்தின் டிரைலரை பார்த்த கமல்ஹாசன், படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பில் ’செம்பி’ படத்தின் இயக்குனர் பிரபு சாலமன், நாயகன் அஸ்வின், முக்கிய வேடத்தில் நடித்துள்ள கோவை சரளா ஆகியோர் உடனிருந்தார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’செம்பி’ திரைப்படத்தில் ’குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடித்துள்ளார். டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து உள்ளார் என்பதும் ஜீவன் ஒளிப்பதிவில்ம் புவன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment