'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு உதவி செய்த அனிருத்!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே கிட்டத்தட்ட பிரபலம் ஆகி விட்டார்கள் என்றும் அதில் பெரும்பாலானோருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஸ்வின், புகழ், ஷிவாங்கி, பவித்ரா, தர்ஷா குப்தா உள்பட ஒரு சில திரைப் படங்களில் தற்போது பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் புகழ் பெற்றவர் அஸ்வின் என்பதும் அவர் தற்போது ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் ’ஆசை’ என்று தொடங்கும் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இளம் இசைப்புயல் அனிருத் உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற சிறப்பான பாடலை வெளியிடுவதில் தனக்கு மிகுந்த பெருமை என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.
ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக
என்ற பல்லவியை கொண்ட இந்த பாடலை விவேக்-மெர்வின் கம்போஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Always happy to launch for this musical duo @iamviveksiva & @MervinJSolomon ?????? Here's #Asai from #EnnaSollaPogirai https://t.co/WgjGxYDG0D#VivekMervinMusic
— Anirudh Ravichander (@anirudhofficial) September 29, 2021
Best wishes team@i_amak @ImHharan #Ravindran @TejuAshwini9 @Avantika_mish @Maathevan @shervinvinu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com