close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த குக் வித் கோமாளி பிரபலமா? காமெடிக்கு பஞ்சமே இருக்காது..!

Saturday, September 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இன்று இன்னொடு ஒரு குக் வித் கோமாளி பிரபலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி ஜாக்குலின், இரவின் நிழல் நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்விராஜ், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், குரேஷி ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் சீரியல் நடிகையுமான ரவீனா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை ரவீனா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மொக்கை ஜோக்குகள் கூறி அனைவரையும் சிரிக்க வைத்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் அதை தொடர்வாரா? அவரால் பிக்பாஸ் வீடு காமெடியில் களை கட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment