குக் வித் கோமாளி: எலிமினேட் ஆன பவித்ராவின் உருக்கமான டுவீட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டரில் உருக்கமான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷகிலா, அஸ்வின், கனி மற்றும் பவித்ரா ஆகிய நான்கு பேர் கலந்துகொண்டனர். இம்யூனிட்டி வெற்றி பெற்ற பாபா பாஸ்கர் இன்று கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் பவித்ரா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில் நூலிழையில் குறைந்த மதிப்பெண்களை பெற்ற பவித்ரா எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பவித்ரா சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் உடன் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.
இந்த நிலையில் சற்று முன் பவித்ரா தனது ட்விட்டரில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: இது ஒரு அற்புதமான பயணம். என் அன்பான மக்களே எனக்கு இதுவரை அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி. மேலும் குக் வித் கோமாலி சீசன் 2 டீமில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
It's been a wonderful journey. Thank you my dear makkale for all the unconditional love and support ❤️??❤️ My sincere and heartfelt thanks to each and every member of CWC2 team ??
— Pavithra Lakshmi (@pavithralaksh_) March 14, 2021
- #pavithralakshmi #pavithra pic.twitter.com/lu5pSszsI0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com