இயக்குனரும் வெளியேறி விட்டார்.. இனி 'குக் வித் கோமாளி' அவ்வளவு தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சிக்கு வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்கு சீசன்களும் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் அறிவித்தனர். இதனை அடுத்து தயாரிப்பாளர் ரவூஃபாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சில குட்பை சொல்வது ரொம்பவே கடினம், ஆனால் அதே நேரத்தில் மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல, நான்கு சீசன்களும் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பயணித்த நினைவுகள் எனது நெஞ்சில் எப்போதும் இருக்கும்.
உங்கள் அனைவரின் அன்பு, ஆசிர்வாதத்திர்கு மிகவும் நன்றி. என்றைக்கும் உங்கள் நன்றி உடையவனாக இருப்பேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர்கள் ஆகியோர் விலகி விட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி இனி அவ்வளவுதானா? என்ற கேள்வி வருத்தத்துடன் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com