இலவச உணவை அடுத்து 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் அடுத்த சமூக சேவை!
- IndiaGlitz, [Friday,June 04 2021]
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் பிரபலம் அடைந்தார்கள் என்பது தெரிந்தது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்களில் ஒருவர் தர்ஷா குப்தா. இவர் தற்போது ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் நிலையில் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்
குறிப்பாக கொரோனா ஊரடங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும், சாலையோரம் வாழும் மக்களுக்கும் அவர் தினந்தோறும் உணவுகள் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பசுமை இயக்கம் என்ற அமைப்பின் மூலம் இவர் செய்து வரும் உதவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது
இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் சேவையை அடுத்து தற்போது பசுமை இயக்கத்தின் மூலம் உலகை பசுமையாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் செய்த பதிவு ஒன்றில் ’உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று முதல் நாம் அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் நட்டு வளர்ப்போம். என்னுடன் பசுமை இயக்கத்தில் ஒன்றிணைந்து இந்த உலகை பசுமை உலகமாக மாற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.