'குக் வித் கோமாளி' நடிகையின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ஸ்பெஷல் அப்டேட்!

  • IndiaGlitz, [Friday,February 12 2021]

மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ’குக்’ ஆக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஒருவரின் திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டவர் தர்ஷா குப்தா என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகி நாயகியாக நடித்து வருகிறார். ‘ருத்ர தாண்டவம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை ஜி மோகன் இயக்கி வருகிறார் என்பதும், இவர் ஏற்கனவே ’திரெளபதி’ என்ற திரைப்படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’ருத்ர தாண்டவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என்றும், அதேபோல் இந்த படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று அதே தினத்தில் மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷா குப்தா பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து தர்ஷாவுக்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

‘திரெளபதி நடிகர் ரிசர்டு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு இந்த படம் காவல் துறை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.