close
Choose your channels

'குக் வித் கோமாளி' தீபா அக்கா இவ்வளவு ஸ்லிம்மாக இருந்தாரா? ஆச்சரிய புகைப்படம்!

Tuesday, January 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள், கோமாளிகள் இன்று திரையுலகிலும் முன்னணியை நட்சத்திரங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தீபா அனைவரையும் மனதையும் வென்றார் என்பது தெரிந்ததே. அவரது கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு, வட்டார பேச்சு, இயல்பான காமெடி, எப்போதும் சிரித்த முகம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தது. அவர் அந்த நிகழ்ச்சியில் சமையலில் பெரியதாக சோபிக்கவில்லை என்றாலும் அவரது காமெடிக்காகவே இன்றும் பலர் அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பாக கணவர் சங்கருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த தீபா தற்போது பிஸியான குணசேத்திர நடிகையாக மாறி உள்ளார்.

இந்த நிலையில் தீபா தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குக் வித் கோமாளி தீபா அக்கா இவ்வளவு ஸ்லிம்மாக இருந்தாரா என்று கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment