'குக் வித் கோமாளி' தீபாவா இது? வைரலாகும் திருமண புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருமே வேற லெவலில் பிரபலமானார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி, புகழ், அஸ்வின், பவித்ரா, தர்ஷா உள்பட பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் பட்டம் பெற்றவர்களுக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகளை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெள்ளேந்தியாக, கள்ளங்கபடமில்லாத சிரிப்பில் அனைவரையும் கவர்ந்தவர் தீபா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சமையல் சரியாக வராது என்றாலும் காமெடியில் அசத்தி வந்ததே அவரை அனைவரும் ரசிக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தீபா, பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டு அசத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தீபாவின் திருமண புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது தீபா இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாரா? என ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.