close
Choose your channels

செருப்படி வாங்குவார்: குக் வித் கோமாளி மணிமேகலை விவகாரம் குறித்து கூறிய பிரபலம்..!

Sunday, September 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திரை உலகை சேர்ந்த பல்வேறு நபர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் செருப்படி வாங்குவார் என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஆக இருந்த மணிமேகலைக்கு அதே நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் மணிமேகலை இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்தார். மணிமேகலைக்கு ஆதரவாக ஏராளமான சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாடகி சுசித்ரா உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் இதுகுறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை அனிதா சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் ’கர்மா தான் உண்மை, யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கின்றார்களோ, அவர் அதேபோன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார். அதனால் நீங்கள் அமைதியாக இருந்தாலே போதும், கர்மா அவர்களை பார்த்துக் கொள்ளும்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்களை ஒருவர் எவ்வளவுதான் கஷ்டப்படுத்தினாலும் அதனை நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம், கர்மா அவர்களை பார்த்துக் கொள்ளும், நீங்கள் உங்கள் குறிக்கோளை நோக்கி செல்லுங்கள் என்றும் அவர் இன்னொரு பதிவில் தெரிவித்துள்ளார். அனிதாவின் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment