'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்த 'குக் வித் கோமாளி' பிரபலம்..! விஷால் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால், எஸ்ஜே சூர்யா உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’ என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த பாடல் கட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ’மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்த பாடல் காட்சிக்கு பாபா பாஸ்கர் நடன இயக்குனராக பணிபுரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடன இயக்குநர் பாபா பாஸ்கர், குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால், ரிதுவர்மா, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Everything positive about #MarkAntony. Song shoot completed. One more day of shoot to go, Excitement max 🤩🤩@iam_SJSuryah @riturv @vinod_offl @selvaraghavan @suneeltollywood @Adhikravi @AbinandhanR @ministudiosllp @HariKr_official pic.twitter.com/EUe22vNcNd
— Vishal (@VishalKOfficial) April 22, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com