close
Choose your channels

புதுக்கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்.. மனைவி குழந்தைகளுடன் க்யூட் புகைப்படம்..!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குறிப்பாக ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் புதிய கார் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் கார் வாங்கியுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் முத்துக்குமார். ஸ்டண்ட் நடிகரான இவர் பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் அவர் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் பலருக்கு இவர் யார் என்பது தெரியவந்தது என்பதும் அதுமட்டுமின்றி பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் அவர் குழந்தை மனம் கொண்டவர் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் பலருக்கு தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முத்துக்குமார் தற்போது புதிய கார் வாங்கியுள்ள புகைப்படத்தை பதிவு வெளியிட்டுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் கார் வாங்கிய க்யூட் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. முத்துக்குமார் இனோவா கிரிஸ்டா என்ற காரை வாங்கி இருப்பதாகவும் இந்த காரின் விலை ரூபாய் 30 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

புதிய கார் வாங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட முத்துக்குமார் அதில் கூறியிருப்பதாவது:

மாற்றமே வாழ்க்கை!
ஏற்றத்தை நோக்கிய என் இனிய திரைப் பயணத்தில்...
எமை வந்தடைந்த புதிய *மகிழுந்து!

எமது குடும்பத்தின் கொண்டாட்டத்தையும் , குதூகலத்தையும்
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்....

எனது பெற்றோருக்கும் , என் இணையருக்கும் , என் குழந்தைகளுக்கும் எமது உழைப்பை அர்ப்பணித்து மகிழ்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு முத்துக்குமார் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment