அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் ’என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரானது என்பதும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் ’என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புதிய போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அஸ்வின் ஜோடியாக தேஜூ அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா நடித்துள்ள இந்த படத்தில் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.