குக் வித் கோமாளி அஸ்வினுக்கு பிக்பாஸ் ஜூலி ஜோடியா? வேறு யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?

  • IndiaGlitz, [Sunday,July 14 2024]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின். இவர் ஷிவாங்கி உடன் ஜோடி சேர்ந்த எபிசோடுகள் அனைத்தும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின், அதன் பிறகு ’செம்பி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது ’நொடிக்கு நொடி’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் அஸ்வின் உடன் ஷாம், நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் ஜூலி, ஜெயபிரகாஷ், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஜய் ஆதிராஜ் இயக்கும் நிலையில் அம்ரிஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தல எங்கள் அழகன்.. பிரேம் போட்டு வீட்டில் வைக்க போறேன்.. விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் தல புகைப்படத்தை தனது வீட்டில் பிரேம் போட்டு மாட்டி வைக்க போகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

'வருஷமெல்லாம் வசந்தம்' ஹீரோ போலவே  இயக்குனரும் தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்?

'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற திரைப்படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த குணால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த படத்தின் இயக்குநரும் இன்று தூக்கில் தொங்கி

லைட்டா தலைவர் சாயல் தெரியுதே: அட.. நம்ம சூரியா.. மதுரை டு லாஸ் ஏஞ்சல்ஸ்..

நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைட்டா தலைவர் சாயல் தெரியுதே

சமையல் அறையில் நச்சு பொருட்களை வைத்துள்ளோம்.. பிரேம்ஜி மனைவியின் அதிர்ச்சி பதிவு..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜியின் மனைவி இந்து தனது சமூக வலைதளத்தில் சமையல் அறையில் நாம் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் உடலுக்கு

'கைதி 2' படத்தில் நிச்சயம் LCU படம் தான்.. யார் யார் இருக்கிறார்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி