close
Choose your channels

குக் வித் கோமாளி அஸ்வினுக்கு பிக்பாஸ் ஜூலி ஜோடியா? வேறு யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?

Sunday, July 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின். இவர் ஷிவாங்கி உடன் ஜோடி சேர்ந்த எபிசோடுகள் அனைத்தும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின், அதன் பிறகு ’செம்பி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது ’நொடிக்கு நொடி’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் அஸ்வின் உடன் ஷாம், நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் ஜூலி, ஜெயபிரகாஷ், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஜய் ஆதிராஜ் இயக்கும் நிலையில் அம்ரிஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment