ஷிவாங்கியுடன் எடுத்த கடைசி போட்டோ: உருக்கத்துடன் பகிர்ந்த அஸ்வின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை விஜய் டிவியில் 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பதும், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக கனி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷகிலா மற்றும் அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது ஒருசில சிறப்பு விருந்தினர்கள் வந்து இருந்தார்கள் என்பதும் அது குறித்த புரமோஷன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களும், கோமாளிகளும் தாங்கள் இன்றுடன் பிரிவதை நினைத்து ஒருவருக்கு ஒருவர் கண்ணீருடன் வாழ்த்து தெரிவித்து விடை பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஸ்வின் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் எடுத்த கடைசி புகைப்படம் இதுதான் என தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 24ம் புலிகேசி வேடத்தில் இருக்கும் ஷிவாங்கி உட்கார்ந்து போன்றும் அவரிடம் அஸ்வின் பேசிக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த புகைப்படத்தை உருக்கத்துடன் பதிவு செய்த அஸ்வின் இந்த புகைப்படத்தை என்னால் என்றும் மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com