'குக் வித் கோமாளி' பிரபலங்கள் அம்மு அபிராமி, புகழ் நடிக்கும் படம்: டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 03 2022]

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் மற்றும் அம்மு அபிராமி நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரையுலகிலும் ஜொலித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்து வரும் புகழ் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது

திருப்பூரில் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் தொடக்க விழாவில் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார். இந்த படத்திற்கு ’பாலமுருகனின் குதூகலம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாலமுருகன் என்பவர் ஹீரோவாகவும், அம்மு அபிராமி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் புகழ் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் கதை திருப்பூரில் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பும் திருப்பூரில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் குறித்து சிம்ரன் என்ன சொன்னார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் குறித்து நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. 

அண்டர்வாட்டரில் கையில் கோப்பையுடன் வித்யூலேகா: வைரல் வீடியோ

நடிகை வித்யூலேகா அண்டர் வாட்டரில் கையில் கோப்பையுடன் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'தளபதி 66' படப்பிடிப்பு: வைரலாகும் விஜய் வீடியோ

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தளபதி விஜய் விமான நிலையம்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் மாஸ் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்' . இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்

சின்னத்திரை சித்ரா மரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

சின்னத்திரை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் .