close
Choose your channels

'குக் வித் கோமாளி' அம்மு அபிராமிக்கு குவியும் வாய்ப்புகள்.. இதோ இன்னொரு படத்தின் பூஜை!

Friday, September 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’, தனுஷ் நடித்த ’அசுரன்’ உள்பட ஒருசில படங்களில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தாலும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மு அபிராமிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் அவருடைய சமூக வலைத்தளத்தில் ஃபாலோயர்கள் அதிகரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அம்மு அபிராமி தற்போது 7 படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்த படத்தின் பூஜை தற்போது நடந்து உள்ளது. சதிஷ் குமரன் என்பவரது இயக்கத்தில் உருவாகும் ‘பெண்டுலம்’ என்ற திரைப்படத்தின் பூஜை இன்று எளிமையாக நடந்த நிலையில் இந்த படத்தில் அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

புதுமையான சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அம்மு அபிராமி, கோமல் சர்மா உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் சதீஷ் குமார் கடந்த 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஷங்கரின் ’ஐ’ திரைப்படத்தின் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், கோவா உள்பட பல பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment