அந்தமானில் குக் வித் கோமாளி நடிகை.. டூபீஸ் நீச்சலுடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Sunday,June 11 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் டூ பீஸ் நீச்சல் உடையில் அந்தமானில் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

சின்னத்திரை தொடர்களான ’முள்ளும் மலரும்’ ’மின்னலே’ ’செந்தூரப் பூவே’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் ’ருத்ரதாண்டவம்’, ‘ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்களில் நாயகி ஆக நடித்திருந்தார் என்பதும் தற்போது அவர் ’மெடிக்கல் மிராக்கிள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள தர்ஷா குப்தா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்த நிலையில் தர்ஷா குப்தா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட அந்தமான் சென்றிருந்த நிலையில் அங்குள்ள நீச்சல் குளத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்தமானில் மிகச் சிறப்பாக பிறந்த நாளை கொண்டாடியதாகவும் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் தர்ஷா குப்தா பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்களின் வேற லெவல் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. ‘முடியல போதும், இதுக்கு முடியல, செத்துருவாங்க நம்ம பசங்க’, நீங்க செலிபிரேட் பண்றீங்களோ இல்லையோ, நாங்க நல்ல செலிபிரெட் பண்றோம்’ போன்ற கமெண்ட்ஸ் வைரலாகி வருகிறது.